மேலும் செய்திகள்
உறைவிடப்பள்ளியில் சிறுவன் கழுத்து நெரித்துக்கொலை
24-Jul-2025
முல்பாகல் : முல் பாகலில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள் ளியில் 6ம் வகுப்பு மாணவனை வார்டன் பெல்ட்டால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் தண்டித்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ள து. இதுதொடர்பாக அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். கோலார் தாலுகாவில் உள்ள சூலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் மகன் அஞ்சன் குமாருடன் தன் சொந்த ஊரான அனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். முல்பாகலில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப் பள்ளியில் தன் மகன் அஞ்சன்குமாரை சேர்த்துள்ளார். இங்கு அவர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். உறைவிடப் பள்ளியில் திங்கட்கிழமை தோறும் மாணவர்களை பெற்றோ ர் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை மகனை சந்திக்க அஸ்வினி வந்தபோது, வார்டன் தாக்கியதாக கூறி, தன் உடலில் உள்ள காயங்களை அஞ்சன் குமார் காட்டியுள்ளார். காயங்களை பார்த்து அதிர்ந்துபோன அஸ்வினி, உடனடியாக வார்டனிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போதும் அவர், தன் செயலை நியாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் அஸ்வினி புகார் செய்தார். இந்த தகவல், காட்டுத்தீ போல் பரவியது. இது பற்றி அறிந்ததும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உறைவிடப் பள்ளி முன் திரண்டனர். நங்கிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களை கலைந்து போகச் செய்தனர். தகவல் அறிந்து, உறைவிடப் பள்ளிக்கு சமூக நலத்துறை மாவட்ட இணை இயக்குநர் சீனிவாசன் விரைந்தார். பாதிக்கப்பட்ட மாணவன் அஞ்சன்குமாரிடமும் சக மாணவர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார். மாண வர்கள் விடுதியில் தங்கியிருக்கும்போது, அங்கு பேய் இருப்பதாக அஞ்சன்குமார் பயமுறுத்துவதாக வா ர்டன் மகேஷ் கிர்டிடம் கூறியுள்ளனர். இதனால் அவரை வார்டன் பெல்ட்டாலும் பிரம்பாலும் கண்மூடித்தனமாக அடித்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்த மாணவனை காலால் உதைத்ததாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் அஞ்சன்குமாரை அடித்தது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளா ர். இதையடுத்து, வார்டன் மகேஷ் கிர்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உறைவிடப்பள்ளியின் முதல்வர் குமார ராஜுவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பள்ளியில் இருந்து கடந்த ஆண்டு முருடேஸ்வருக்கு சுற்றுலா சென்றபோது, 3 மாணவியர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அப்போதும் முதல்வர் மற்றும் பிற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
24-Jul-2025