மேலும் செய்திகள்
தீயணைப்பு வாகனம் மோதி வாலிபர் பலி
05-Oct-2025
தாவணகெரே : வீட்டில் சுடு தண்ணீர் காய்ச்சும் பாய்லர் வெடித்ததில், சிறுமி உயிரிழந்தார்; மூவர் காயமடைந்தனர். தாவணகெரே நகரின், துர்கிகுடி வடக்கு பகுதியில் வசித்தவர் ஸ்வீக்ருதி, 11. இவர் நேற்று காலை குளிப்பதற்காக, தண்ணீர் சுட வைக்க பாய்லரை ஆன் செய்தார். அப்போது, பாய்லர் வெடித்து சிதறியது. இதில் சிறுமி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டில் இருந்த தீர்த்தி பாய், ஹூவா நாயக், சுனிதா பாய் ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த தாவணகெரே போலீசார், தீயணைப்பு படையினரின் உதவியுடன், தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்த மூவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடலை மீட்டனர். தீயணைப்பு படையினர், விரைந்து செயல்பட்டதால், அக்கம், பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பாய்லர் வெடித்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாய்லர் வெடித்ததற்கு என்ன காரணம் என்பது, விசாரணைக்கு பின்னரே தெரியும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
05-Oct-2025