உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாவரகெரே பூங்கா அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

 தாவரகெரே பூங்கா அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

பெங்களூரு: 'தாவரகெரே பூங்கா அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என, பெங்., குடிநீர், வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது. பெங்களூரு தாவரகெரே பூங்காவின் அருகிலுள்ள மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றம், சுகாதாரமின்மையை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை கருதி, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம், பூங்காவின் அருகிலுள்ள பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இதன் மூலம், மழைநீர் வடிகாலிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இதனால், துர்நாற்றம் வீசாது; சுகாதாரம் மேம்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டர் செயல்முறைகள் வெளிப்படையாக மற்றும் விரைவாக முடிக்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை