உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பஸ் மோதியதில் சிறுவன் பலி

அரசு பஸ் மோதியதில் சிறுவன் பலி

ராய்ச்சூர்: ராய்ச்சூர் லிங்கசுகூர் நகர மத்திய பஸ் நிலையத்தில், இரு சிறுவர் மீது அரசு பஸ் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார். ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூர் டவுனை சேர்ந்தவர் பசவராஜ். சித்தராமா, 11, தனஞ்செயா, 10, ஆகிய இரு மகன்களுடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். செல்ல லிங்கசுகூர் டவுன் பஸ் நிலையத்துக்கு நேற்று வந்திருந்தனர். வீட்டுக்கு செல்வதற்கு முன்பு, மகன்களை பஸ் நிலையத்தில் நிற்க வைத்துவிட்டு, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, பசவராஜ் சென்றார். அந்நேரத்தில் பஸ் நிலையத்துக்குள் ஒன்றன் பின் ஒன்றாக, இரண்டு பஸ்கள் நுழைந்தன. இரு சிறுவர்கள் நின்றிருப்பதை கவனிக்காத கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுநர், அவர்கள் மீது மோதினார். கீழே விழுந்த சித்தராமா மீது பஸ் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனஞ்செயாவின் இரு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. சம்பவத்தை அங்கிருந்த மக்கள், படுகாயமடைந்த தனஞ்செயாவை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகன் உயிரிழந்ததை பார்த்த பசவராஜ், கதறி அழுதார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனை பார்க்க சென்றார். தகவல் அறிந்த லிங்கசுகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை