பிரஜ்வலுக்கு ஜாமின் மறுப்பு
பெங்களூரு: கட்டாய ஜாமின் சலுகை, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கிடைக்காது என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணிப்பெண் பலாத்கார வழக்கில், இவருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும்படி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், தற்போது பெங்களூரின், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். ஜாமினில் விட அவர் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா, 'நிர்ணயித்த காலத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில், பிரஜ்வல் கட்டாய ஜாமின் கேட்கலாம். ‘‘ஆனால் வேறு ஒரு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், கட்டாய ஜாமின் சலுகை அவருக்கு கிடைக்காது,’’ என கூறி ஜாமின் அளிக்க மறுத்தார்.