மேலும் செய்திகள்
அடுத்தடுத்து வீடுகளில் தங்க நகைகள் திருட்டு
14-May-2026
தங்கவயல்: பங்காருபேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வீடு புகுந்து திருடியவரை போலீசார் பிடித்து, அவரிடமிருந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டனர். கடந்த மார்ச் 3ல், பங்காருபேட்டை பாபாநகர் பகுதியில் வசித்து வரும் மாதவி என்பவர் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 80 கிராம் நகைகளை திருடிச் சென்றிருந்தனர். போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை, 2-வது பிளாக்கில் வசித்து வரும் நரேஷ், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 80 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
14-May-2026