உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பயணியை உதைத்து தள்ளிய பஸ் நடத்துநர் சஸ்பெண்ட்

 பயணியை உதைத்து தள்ளிய பஸ் நடத்துநர் சஸ்பெண்ட்

நெலமங்களா: பி.எம்.டி.சி., பஸ்சில் ஏற முயற்சித்த பயணியை, எட்டி உதைத்து, தள்ளிவிட்ட நடத்துநர் 'சஸ்பெண்ட ் ' செய்யப்பட்டார். இரு சக்கர வாகன ஓட்டி, தனது ஹெல்மெட்டில் கண்காணிப்பு கேமரா அணிந்தபடி பயணித்தார். பெங்களூரு நெலமங்களா சுங்கச்சாவடி அருகில் பி.எம்.டி.சி., பஸ் அருகில் சென்றார். நின்றிருந்த பஸ்சில் ஏற முயற்சித் த பயணியை உதைத்து, கீழே தள்ளிவிடும் காட்சி அவரின் கேமராவில் பதிவானது. இந்த காட்சியை, பைக் பயணி தனது சமூக வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்திருந்தார். நடத்துநரின் செயலுக்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விஷயத்தை தீவிரமாக எடுத்து கொண்ட, பி.எம்.டி.சி., நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடத்துநர் கிருஷ்ணமூர்த்தியின் நடத்தையை எந்த சூ ழ்நிலையிலும் பொறுத்து கொள்ள முடியாது. அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பவத்தின் உண்மையான விபரங்களை தெரிந்து கொள்ள, குற்றம்சாட்டப்பட்ட நடத்துநர், பாதிக்கப்பட்ட பயணி, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும். பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், பிற ஆதாரங்களை ஆய்வு செய்து, முழு விசாரணைக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை