மேலும் செய்திகள்
பேருந்தில் நடத்துநரின் போன் பை ' ஆட்டை … '
21-Jul-2025
பெங்களூரு : பி.எம்.டி.சி., பஸ் ஓட்டி இளம் பெண்ணை சாகடித்த பி.எம்.டி.சி., நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பெங்களூரு பீன்யா 2வது ஸ்டேஜில், கடந்த 18ம் தேதி, பி.எம்.டி.சி., பஸ்சை, நடத்துநர் ஓட்ட முயற்சி செய்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது பஸ் மோதியது. இதில், வங்கியில் வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் சுமா, 25, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். பீன்யா போக்குவரத்து போலீசார், நடத்துநர் ரமேஷை கைது செய்தனர்.இந்நிலையில், பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் நேற்று வெளியாகின. அதில், நடத்துநர் பஸ்சை ஓட்ட தெரியாமல் மோதியது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும்; நடத்துநர் ரமேஷை சஸ்பெண்ட் செய்து உள்ளதாகவும் பி.எம்.டி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.டிரைவர் ஓட்ட வேண்டிய பஸ்சை நடத்துநர் ஓட்டி, இளம் பெண்ணின் உயிரை பறித்து உள்ளார். இவ்வளவு பெரிய தவறு செய்த நடத்துநரை சஸ்பெண்ட் மட்டும் செய்து உள்ளனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி அளிக்கப்பட்டது சரியா என பி.எம்.டி.சி., மீது மக்கள் கோபம் அடைந்து உள்ளனர். 'ஒரு உயிரின் விலை, ஒரு லட்சம் தானா' என, பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
21-Jul-2025