உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்

 பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்

பெங்களூரு: ''போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து விவாதிக்க விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்,'' என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய திருத்த பிரச்னையை தவிர, துறையில் வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஐந்து நாட்களுக்கு முன்பு, முதல்வரை சந்தித்துப் பேசினேன். விரைவில் ஒரு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். கரும்பு விலை உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோ டியை சந்திக்க முதல்வர் சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்திப்பது வழக்கம். என்ன விவாதங்கள் நடந்தன என்று எனக்கு தெரியவில்லை. நாளிதழ்கள் மூலம் மட்டுமே தெரிந்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்