உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகை சஞ்சனாவிடம் மோசடி செய்த தொழிலதிபருக்கு ரூ.61 லட்சம் அபராதம்

நடிகை சஞ்சனாவிடம் மோசடி செய்த தொழிலதிபருக்கு ரூ.61 லட்சம் அபராதம்

பெங்களூரு; பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி. இவரது நண்பர் தொழிலதிபர் ராகுல் ஷெட்டி தோன்சே. பெங்களூரின் பனசங்கரி மூன்றாவது ஸ்டேஜில் வசிக்கிறார். இவர் கோவா மற்றும் இலங்கை நாட்டின் கொழும்புவில் காசினோக்களை நடத்தி வருகிறார்.தான் கூறிய இடங்களில், முதலீடு செய்தால் அதிகமான லாபம் கிடைக்கும் என, நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ராகுல் ஷெட்டி தோன்சே ஆசை காட்டினார்.இதை நம்பி 2018ல் 45 லட்சம் ரூபாயை நடிகை முதலீடு செய்தார்.பல ஆண்டுகளாகியும் பணம் கிடைக்கவில்லை. பணத்தை திருப்பித் தரும்படி நெருக்கடி கொடுத்ததால், இரண்டு முறை காசோலை கொடுத்தார்.இந்த காசோலைகள், பணம் இல்லாமல் திரும்பின. இதுகுறித்து, பெங்களூரின் இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் அளித்தார்.போலீசாரும் ராகுல் ஷெட்டி தோன்சே மீது, மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.விசாரணை முடித்து, பெங்களூரின் 33வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 61.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இம்மாதம் 5ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தொகையில் நீதிமன்ற கட்டணம் 10,000 ரூபாயை பிடித்தம் செய்து கொண்டு, மிச்ச தொகையை புகார்தாரர் சஞ்சனாவிடம் வழங்க வேண்டும்.நிர்ணயித்த நாட்களில் இந்த தொகையை வழங்காவிட்டால், ஆறு மாத சிறை தண்டனையுடன், அபராதமும் செலுத்த வேண்டும் என, உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ