உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தொழிலதிபர் கடத்தி கொலை மர்ம கும்பலுக்கு வலை

தொழிலதிபர் கடத்தி கொலை மர்ம கும்பலுக்கு வலை

நெலமங்களா: துமகூரை சேர்ந்தவர் திலீப், 40. இவர், பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், தாபஸ்பேட்டில் கார்கோ நிறுவனம் நடத்துகிறார். திருமணமான இவர், மனைவியை பிரிந்து, சோலுாரில் வாடகை வீட்டில் வசிக்கிறார்.சமீபத்தில் வீட்டு உரிமையாளரின் மனைவி அம்ருதா, 35, திலீப்புக்கு அறிமுகமானார். இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அம்ருதா, கணவரை உதறிவிட்டு திலீப்புடன் சேர்ந்து வாழ துவங்கினார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால், பலரின் கோபத்துக்கு ஆளானார். அவருக்கு அவ்வப்போது மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை அவர் பொருட்படுத்தவில்லை.நேற்று காலையில் திலீப், தன் மனைவியுடன் நெலமங்களாவின், கார்டன் ஹோட்டலுக்கு சாப்பிட வந்திருந்தார். அப்போது நான்கைந்து பேர் கொண்ட மர்ம கும்பல், ஹோட்டலுக்குள் நுழைந்தது. திலீப்பை மிரட்டி கடத்தி சென்றது.நெலமங்களா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் மர்ம கும்பலை தேட துவங்கினர். துமகூரின் ஜெயபுராவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், திலீப் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்துகின்றனர்.அம்ருதாவின் குடும்பத்தினர், திலீப்பை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை