உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு பஸ் மோதி காய்கறி கடைக்குள் புகுந்த கார்

 அரசு பஸ் மோதி காய்கறி கடைக்குள் புகுந்த கார்

ஹாசன்: ஹாசனில் அரசு பஸ் மோதியதில், சாலை ஓரத்தில் இருந்த காய்கறிகள் கடைக்குள் கார் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஹாசன் மாவட்டம், பழைய தேசிய நெடுஞ்சாலை 75ல் பனானாகட்டே அருகில் நேற்று முன்தினம் காலையில், ஹுண்டாய் கார் ஒன்று, 'யு டர்ன்' அடித்தது. அப்போது, பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவை நோக்கி சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மறுபக்கத்தில் சாலை ஓரத்தில் இருந்த காய்கறிகள் கடைக்குள் புகுந்தது. அப்போதும் பஸ் கட்டுப்பாட்டை இழுந்து, மற்றொரு கார் மீது மோதி நின்றது. கடை உரிமையாளர் கடையில் இருந்து துாரத்தில் இருந்ததால் உயிர் தப்பினார். தகவல் அறிந்த சக்லேஸ்பூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், ஹுண்டாய் கார் ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி