உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாடிக்கையாளர் வீட்டில் நகை திருடிய கார் டிரைவர்

 வாடிக்கையாளர் வீட்டில் நகை திருடிய கார் டிரைவர்

ஹெப்பால்: வாடிக்கையாளர் வீட்டில் நகை திருடிய, கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு ஹெப்பாலில் வசிப்பவர் சையது சல்மான்; தொழில் அதிபர். இவரும், இவரது மனைவியும் வெளியே செல்ல வேண்டும் என்றால், ஹெப்பாலில் வசிக்கும் கார் டிரைவர் அப்துல் ரகுமான், 45, என்பவரின் காரில் செல்வது வழக்கம். கடந்த மாதம், 11ம் தேதி சையது சல்மானும், அவரது மனைவியும் மும்பைக்கு விமானத்தில் சென்றனர். முன்னதாக ஹெப்பாலில் இருந்து விமான நிலையத்திற்கு அப்துல் ரகுமான் காரில் சென்றுள்ளனர். காரில் செல்லும் போது மூன்று நாட்கள் கழித்து திரும்ப வருவது பற்றி பேசியுள்ளனர். இதனை கவனித்த டிரைவர், தம்பதியை விமான நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு, அவர்கள் வீட்டிற்கு சென்றார். கதவை உடைத்து உள்ளே புகுந்தார். அலமாரியில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகைள திருடிச் சென்றார். மும்பையில் இருந்து திரும்பியதும் வீட்டில் திருட்டு நடந்ததை அறிந்த சையது சல்மான், ஹெப்பால் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தொழில்நுட்ப அடிப்படையில், அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி