உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வரை பற்றி அவதுாறு பேச்சு நடிகர் தன்வீர் கவுடா மீது வழக்கு

முதல்வரை பற்றி அவதுாறு பேச்சு நடிகர் தன்வீர் கவுடா மீது வழக்கு

சாம்ராஜ்பேட்: முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஜமீர் அகமது கானை பற்றி அவதுாறாக பேசியதாக, நடிகர் தன்வீர் கவுடா மீது வழக்கு பதிவாகி உள்ளது. கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமிக்கும், நடிகர் தன்வீர் கவுடாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் – வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமி மேலாளர் நாகராஜ், திரைப்பட தயாரிப்பாளர் போஜராஜ் ராயை மிரட்டியதாக தன்வீர் மீது ஆர்.ஆர்.நகர், பசவேஸ்வராநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவானது. இந்நிலையில், தனது ஆதரவாளர் ஒருவருடன் தன்வீர் கவுடா மொபைல் போனில் பேசும் போது, முதல்வர் சிவகுமார், அமைச்சர் ஜமீர் அகமது கான், அவரது மகனும், நடிகருமான ஜைத் கானை பற்றி அவதுாறாக பேசினார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தன்வீர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஜைத் கான் ரசிகர் மன்ற தலைவர் விநாயக், கடந்த 27ம் தேதி, சாம்ராஜ்பேட் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் தன்வீர் மீது நேற்று, 3வது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !