உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராகுல் குறித்து அவதுாறு  பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

 ராகுல் குறித்து அவதுாறு  பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு

உடுப்பி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குறித்து, ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லியில் பிரதமர் மோடி வீட்டுக்கு முன் போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கண்டித்து, உடுப்பி சர்வீஸ் பஸ் நிலையத்திற்கு அருகே, பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது . இப்போராட்டத்தில், உடுப்பி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா பங்கேற்றார். அப்போது, 'ராகுலின் வம்சத்தை அழிப்போம்' என்ற ரீதியில், யஷ்பால் பேசியதாக உடுப்பி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோக் குமார் உடுப்பி டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இரு கட்சியினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து, கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.எல்.சி.,யுமான மஞ்சுநாத பண்டாரி கூறியதாவது: யஷ்பால் சுவர்ணா பேசிய கருத்துகளை மாநில அரசு தீவிரமாக எடுத்துள்ளது. அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யஷ்பால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவை சந்திக்க உள்ளேன். அரசியலில் ஆக்கப்பூர்வமான கருத்துகளால் மட்டுமே பதிலளிக்க வேண்டும். அவர் பேசிய வீடியோ, போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை