உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஆவணம் சமர்ப்பித்த காங்., பிரமுகர் மீது வழக்கு 

போலி ஆவணம் சமர்ப்பித்த காங்., பிரமுகர் மீது வழக்கு 

பெங்களூரு : பள்ளி கல்வித்துறையிடம் போலி ஆவணம் சமர்ப்பித்ததாக, தனியார் பள்ளியின் முதல்வரான, காங்கிரஸ் பிரமுகர் குரப்பா நாயுடு, அவரது மனைவி மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பெங்களூரு, தியாகராஜநகரை சேர்ந்தவர் குரப்பா நாயுடு. தனியார் பள்ளியின் முதல்வரான இவர், காங்கிரஸ் பிரமுகர் ஆவார். கடந்த 2020ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கு, மாநகராட்சியிடம் இருந்து கட்டுமான பணிகள் முடிந்தற்கான சான்றிதழை குரப்பா நாயுடு பெறவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போலியாக ஆவணம் தயாரித்து, பள்ளி கல்வித்துறையிடம் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து உயர் நீதிமன்ற வக்கீல் சுதா கட்வா என்பவரு க்கு தெரிய வந்தது. குரப்பா நாயுடு, அவரது மனைவியும், கல்வி நிறுவன அறங்காவலருமான சுனிதா மீது, ஹலசூரு கேட் போலீசில் சில தினங்களுக்கு முன்பு புகார் செய்தார். அந்த புகாரை பரிசீலித்த போலீசார், குரப்பா நாயுடு, சுனிதா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ