உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்., மீது வழக்கு

பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்., மீது வழக்கு

பீன்யா: திருமணம் செய்வதாக உல்லாசம் அனுபவித்து, பெண்ணை ஏமாற்றிய டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பெங்களூரு, கோவிந்தபுராவில் வசிப்பவர் 36 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக புகார் அளிக்க டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையம் சென்றார். அப்போது, பெண்ணிற்கும், இன்ஸ்பெக்டர் சுனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீன்யா 8வது மைல் பகுதியில் வசித்த சுனில், தன் மனைவி இல்லாத நேரத்தில், வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசமாக இருந்துள்ளார். பல முறை இது நடந்துள்ளது. திடீரென பெண் உடனான தொடர்பை சுனில் கைவிட்டார். இதுபற்றி பெண் கேட்டபோது, திருமணம் செய்ய மறுத்ததுடன், 'என் மீது புகார் கொடுத்தால் சும்மா விட மாட்டேன். உன் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன்' என மிரட்டினார். பாதிக்கப்பட்ட பெண், தனது சமூகத்தை சேர்ந்த சில தலைவர்கள் உதவியுடன், சுனில் மீது கடந்த 22ம் தேதி, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி, கோவிந்தபுரா போலீசாருக்கு, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டது. விசாரணையில், சுனில் மீது பெண் கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிந்தது. நேற்று முன்தினம் சுனில் மீது கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண்ணுடன், சுனில் உல்லாசமாக இருந்த இடம், பீன்யா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு வருவதால், கோவிந்தபுரா போலீசார் வழக்கை பீன்யா போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாற்றினர். சுனில் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை