உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு

 ஜனாதிபதி பெயரில் போலி வீடியோ; மோசடிக்கு முயன்றவர் மீது வழக்கு

பெங்களூரு: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுவது போல ஏ.ஐ., மூலம் போலி வீடியோவை முகநுாலில் பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட முயன்றவர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர். குறைந்த பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டுவது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுவது போன்ற போலி வீடியோ முகநுாலில் பகிரப்பட்டு வந்தது. இந்த வீடியோ ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'டீப்பேக்' முறையில் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை மஹாலட்சுமி லே - அவுட் போலீஸ் நிலையத்தின் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவின் பொறுப்பாளர் ராகேஷ் கண்டுபிடித்து உள்ளார். இதையடுத்து, மஹாலட்சுமி லே - அவுட் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவை முகநுாலில் பகிர்ந்த அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை உண்மை என நம்பி யாராவது பணம் அனுப்பி ஏமாந்து போகலாம் என்பதால், அந்த வீடியோ முகநுாலில் இருந்து நீக்கப்பட்டது. விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் சைபர் குற்றவாளி கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி