உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமார், சுரேஷை திட்டியவர் மீது வழக்கு

சிவகுமார், சுரேஷை திட்டியவர் மீது வழக்கு

பெங்களூரு தெற்கு : துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷை ஆபாச வார்த்தைகளால் திட்டியவர் மீது, வழக்குப்பதிவாகி உள்ளது.கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவரது தம்பி சுரேஷ். இவர் முன்னாள் எம்.பி., ஆவார். இவர்கள் இருவரும் பெங்களூரு தெற்கு மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று, ஆபாச வார்த்தையில் திட்டி, சமூக வலைத்தளத்தில் ஒருவர் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த சுரேஷின் கார் டிரைவர் ரக் ஷித், கனகபுராவின் கோடிஹள்ளி போலீசில், நேற்று முன்தினம் புகார் செய்தார். வீடியோ பேசியவர் யார் என்று போலீசார் விசாரித்த போது, கனகபுரா அருகே ஹலசூரு கிராமத்தின் ரவீந்திரன், 44, என்பது தெரிந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !