உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அந்தரங்க வீடியோ வெளியிடுவதாக மாணவியை மிரட்டியவர் மீது வழக்கு

 அந்தரங்க வீடியோ வெளியிடுவதாக மாணவியை மிரட்டியவர் மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரில் தங்கி படிக்கும் இலங்கை மாணவியின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டை சேர்ந்த 24 வயது மாணவி, பெங்களூரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராமில்' அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மெசேஜ் வந்தது. இருவரும் பேசிப் பழகினர். 'வாட்ஸாப்' எண்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். வாட்ஸாப்பில் 'வீடியோ கால்' பேசி வந்தனர். அப்படி பேசும்போது, அப்பெண்ணுக்கு தெரியாமல், 'ஸ்கிரீன் ரெக்கார்டிங்' மூலம் அவரது அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்தார். இந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு, அப்பெண்ணை அந்த நபர் மிரட்டினார். இதனால் அப்பெண்ணும், அவர் கூறிய வங்கிக் கணக்கிற்கு 36,000 ரூபாய் அனுப்பினார். மேலும் பணம் கேட்டு, அந்த நபர் தொல்லை கொடுத்தார். செய்வதறியாது திகைத்த அப்பெண், பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்டாகிராம் கணக்கு, வங்கிக் கணக்கு விபரங்களை வாங்கி, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை