மேலும் செய்திகள்
ரூ.1.38 கோடி சுருட்டல்!
28-Jan-2026
ஹாசன்: ஏ.டி.எம்., மையங்களில் நிரப்ப வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. ஹாசன் நகரில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு, பணம் நிரப்பும் பொறுப்பை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றிருந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய நந்தீஷ், 35, மதுகுமார், 32, என்ற இருவர் தான், ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் ஏ.டி.எம்.,களில் நிரப்ப வேண்டிய பணத்தை நிரப்பாமல், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். அதாவது, கனரா வங்கியின், 11 ஏ.டி.எம்.,கள், எஸ்.பி.ஐ., வங்கியின் மூன்று ஏ.டி.எம்.,கள் உட்பட, 18 ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்பியதாக, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, 3.40 கோடி ரூபாயை சுருட்டியுள்ளனர். அந்தப் பணத்தை தங்களின் சொந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளனர். கடந்த, 18 மற்றும் 19ம் தேதிகளில், நிறுவனத்தில் மாதாந்திர கணக்கு தணிக்கை நடந்த போது, முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து, ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில் தனியார் நிறுவன அதிகாரி புகார் அளித்தார். இதன்படி போலீசார் நந்தீஷ், மதுகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
28-Jan-2026