மேலும் செய்திகள்
மக்களை அச்சுறுத்தும் காட்டெருமைகள்
19-May-2026
சிக்கமகளூரு: வீட்டிற்குள் புகுந்து. 5 முட்டைகளை விழுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டதால், குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா எஸ்.கே.மேகல் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு, 49, விவசாயி. இவரது வீட்டில் நேற்று காலை நாகப்பாம்பு புகுந்தது. வீட்டின் சமையல் அறையில் இருந்த, ஐந்து நாட்டு கோழி முட்டைகளை விழுங்கியது. இதை குடும்பத்தினர் கவனித்ததும், பயத்தில் நடுங்கினர். உடனடியாக அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள், பாம்பு பிடிக்கும் நிபுணர், 'ஸ்னேக் ரிஸ்வான்' சம்பவ இடத்திற்கு வந்தனர். 30 நிமிடங்கள் போராடி பாம்பை பிடித்தார். பாம்பு பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு, எடுத்து செல்லப்பட்டது. பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனால், குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
19-May-2026