உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாமதமாக வந்த ஊழியர்கள் நிற்க வைத்து சி.இ.ஓ., தண்டனை

தாமதமாக வந்த ஊழியர்கள் நிற்க வைத்து சி.இ.ஓ., தண்டனை

தாவணகெரே: பள்ளியில் மாணவர்கள் தாமதமாக வந்தால், ஆசிரியர்கள் வெளியே நிற்கவைத்து தண்டிப்பதை பார்த்திருக்கிறோம். அலுவலக பணிக்கு தாமதமாக வந்த ஊழியர்களை, மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி, வாசலில் நிற்க வைத்தார். தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து அலுவலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், தினமும் அலுவலகத்துக்கு தாமதமாக வருகின்றனர். இவர்களால் பணிகள் தேக்கமடைந்துள்ளன. அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் வர வேண்டும் என, உயர் அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் பயன் இல்லை. நேற்று காலையும் பலர், அலுவலக பணிக்கு தாமதமாக வந்தனர். இதனால் எரிச்சல் அடைந்த மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரி கித்தே மாதவ விட்டல் ராவ், தாமதமாக வந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வாசலிலேயே சிறிது நேரம் நிற்க வைத்தார். அதன்பின் எச்சரித்து, உள்ளே அனுமதித்தார். சி.இ.ஓ.,வின் நடவடிக்கையை பலரும் பாராட்டினர். ஊழியர்கள் அலுவலக வாசலில் நின்றிருப்பதை, பொது மக்கள் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, சி.இ.ஓ., கூறுகையில், “அலுவலக ஊழியர்கள், சரியான நேரத்தில் பணிக்கு வராமல், இஷ்டப்படி வருகின்றனர். இதனால் வெளியே நிற்க வைத்து எச்சரித்தேன். இனியும் அவர்கள் இதே போன்று நடந்து கொண்டால், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VenuKopal, S
செப் 13, 2025 07:17

பாத்து. அடுத்த நடவடிக்கை உங்கள் மேல் எடுத்து தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றி விடுவார்கள் இந்த மாடல்...


சாமானியன்
செப் 13, 2025 06:19

பதினைந்து நிமிடங்கட்கு மேலே வருபவர்கட்கு அரைநாள் சம்பளம் கட். மேலதிகாரியே ! தண்டனையை பணத்தோடு இணைத்தால்தான் புத்தி வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை