உள்ளூர் செய்திகள்

செக் போஸ்ட்

இன்னும் கனவாக

அ ரசு சலுகை வீட்டு வாசலுக்கே வந்து சேர வேண்டும்னு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவங்க சொல்வது புதியதல்ல. ஆனால் அவைகள் வந்து சேரலையே; வரும் என்ற கனவும் இன்னும் கலையவில்லை. கோல்டு சிட்டிக்கு வட்டாட்சி அலுவலகம் ஏற்படுத்தி ஏழு ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அரசு உதவித்தொகையை பெறுவதற்கு சமூக நலத்துறை ஆபீசுக்கு ப.பேட்டை சென்று வரும் நிலையே தொடருதே. இதுக்கு யார் பொறுப்பு. சி.எம்., இடத்தில அசம்பிளி மேடம் ஆதங்கத்தை கொட்டியும் என்ன பிரயோஜனம். முதல்வர் பதவியை தக்க வைக்கும் வேலையே பெரிசா இருக்குதே தவிர, கோல்டு சிட்டி பிரச்னைக்கு கவனம் செலுத்த மனம் இறங்க நேரம் கிடைக்குமா.

ஹிட்லர்கள் தர்பார்

ப ட்டண பஞ்சாயத்து தேர்தலில், கைக்காரங்க தோற்றதால், அக்கட்சியில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்குது. உணவு அமைச்சரை, கோஷ்டி ஒதுக்கியதால், 'எங்களால் எதையும் சாதிக்க முடியும்' என்ற தெனாவட்டு பேசினவங்க தோல்வியை கண்டு, கூனி குறுகுறாங்க. கோலார் மாவட்ட கை கட்சியில், கோலாரு, மாலுாரு அசெம்பிளிக் காரங்க ஹிட்லர் நெனப்பில் அலட்சியப்படுத்தியதன் விளைவு கை கோட்டை சரிந்திருப்பதாக ப.பேட்டை அசெம்பிளிக்காரரு கூறியுள்ளாரு.

ஏதோ ஒண்ணு...

மை னிங் பகுதியில் உள்ள வீடுகளை சொந்தம் ஆக்கும் முதற் கட்ட திட்டமாக 45 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்கு முன் சர்டிபிகேட் கொடுத்தாங்க. லோக் சபா தேர்தல் அறிவிப்பால் மீதி பேருக்கு சர்ட்டிபிகேட் வழங்கல. கோல்டு மைனிங் ஆபீசர்கள் முனிசி., ஆபீசுக்கு வந்து சர்ட்டிபிகேட் பேரில் பட்டா பதிவு செய்வது குறித்து டிஸ்கஷன் நடத்தி இருக்காங்க. மாவட்ட கலெக்டரை அணுகாமல், முனிசி.,யில் பேசியிருப்பது வெறும் நாடகமாக இருக்குது. மைனிங் குடியிருப்பு பகுதி 4,000 ஏக்கர் மட்டுமே, ஆனால், பல கிராமங்களில் விளை நிலங்களாக, குடியிருப்பு பகுதிகளில் வீடுகளாக 8,000 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் இருப்பதை ஏன் கண்டுக்கல. மைனிங் நிலத்தை, கிராம பஞ்., எப்படி பட்டா தயாரித்து வழங்கியது. அதுபற்றி மாவட்ட கலெக்டர் அலுவலக காதுகளுக்கு போய் சேரலயா. டில்லியில் தங்கியிருந்த மைனிங் ஆபீசர்களுக்கு அந்த அமைச்சகம் நிறைய டைரக் ஷன் கொடுத்திருக்கு. ஏதோ ஒண்ணு நடக்க போகுது; அதனால் தொழிலாளர் குடியிருப்பு வீடுகள் மீது பார்வை விழுந்திருக்குது.

சட்ட சிக்கல் தீரலையே

மு தல்வரின் அரசியல் செக்ரேட்டரி, கோல்டு சிட்டியில் கோல்ப் விளையாடும் புல்வெளி மைதானம் காலியாக போகுது. அந்த இடத்தில் சட்டப் பிதா நினைவு மண்டபம் அமைக்க போவதாக 'மேப்' போட்டிருக்காங்க. இதுவும் வில்லங்கமாக இருக்குதாம். ஏற்கனவே ஏ.ஆர்.டி.ஏ., ஆபீசு அருகே அமைக்கப்போவதாக பேனர் வச்சாங்க. அது, இடம் மாறி போச்சு. தற்போது கோல்ப் மைதானம் காலி செய்யப் போறதா தெரிய வந்திருக்கு. இதனை இழக்க செயலர் விடுவாரா. ஏற்கனவே, நீதிமன்றம் அருகே கட்டப்பட்ட அரங்கம் திறக்கப்படாம உள்ளது. சட்டப்பிதாவுக்கு சட்ட சிக்கல் தீரலையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !