உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்பேட் பா.ஜ., யுவ மோர்ச்சா தலைவர்கள் நியமனம்

சிக்பேட் பா.ஜ., யுவ மோர்ச்சா தலைவர்கள் நியமனம்

பெங்களூரு: சிக்பேட் தொகுதிக்கு, பா.ஜ., யுவ மோர்ச்சா தலைவர், துணை தலைவர்களை, தொகுதி தலைவர் தன்ராஜ் நியமித்துள்ளார். பெங்களூரு சிக்பேட் தொகுதி பா.ஜ., தலைவர் தன்ராஜ். தமிழரான இவர், முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இவர், சிக்பேட் தொகுதியின் பா.ஜ., யுவ மோர்ச்சாவுக்கு தலைவராக நாகார்ஜுன், துணை தலைவர்களாக அருண், சதீஷ், பிரதீப், ராமகிருஷ்ணா. முதன்மை செயலர்களாக சந்தன், விகாஸ், செயலர்களாக பவன், நிதின், வர்ஷித் குமார், விஜய், பொருளாளராக சூரஜ், நிர்வாக குழு உறுப்பினர்களாக சேத்தன், மோகன், ராகேஷ், பிரேம், தர்ஷன் ஜெயின் ஆகியோரை நியமித்து உள்ளார். இதற்கான பட்டியலை, சிக்பேட் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., உதய் கருடாச்சாரிடம், தன்ராஜ் நேற்று கொடுத்து ஒப்புதல் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !