உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏழ்மையிலும் பொது சேவை திருநங்கைக்கு முதல்வர் பாராட்டு

ஏழ்மையிலும் பொது சேவை திருநங்கைக்கு முதல்வர் பாராட்டு

பல்லாரி: திருநங்கை ஒருவர், தான் பிச்சையெடுத்த பணத்தில், ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். இவரை பாராட்டி முதல்வர் சித்தராமையா, கடிதம் எழுதியுள்ளார். பல்லாரியின், சுக்கேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் திருநங்கை ராஜம்மா, 58. தினமும் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார். கிடைக்கும் பணத்தில் தன் தேவைக்கு போக, மிச்சமாகும் தொகையை நற்பணிகளுக்கு செலவிடுகிறார். சுக்கேனஹள்ளியில் வசிக்கும், சில ஏழை மாணவ -- மாணவியர் சீருடை இல்லாமல் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தனர். இதை கவனித்த ராஜம்மா, தன் சொந்த செலவில் சீருடைகள் வாங்கி கொடுத்து பள்ளிக்கு செல்லும்படி வாழ்த்தினார். சில மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வாங்கி கொடுத்தார். பல சவால்கள், பிரச்னைகளை சந்தித்து வாழ்க்கை நடத்தும் நிலையிலும், மற்றவருக்கு உதவும் இவரை பற்றிய தகவல், முதல்வர் சித்தராமையா கவனத்துக்கு சென்றது. மகிழ்ச்சி அடைந்த முதல்வர் சித்தராமையா, ராஜம்மாவுக்கு கடிதம் எழுதி பாராட்டியுள்ளார். 'இவரது வாழ்க்கை மற்றவருக்கு முன் மாதிரியாக அமைந்துள்ளது' என, கருத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை