உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் அகழ்வாராய்ச்சிகள் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் அகழ்வாராய்ச்சிகள் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

கதக் : ''கர்நாடகா முழுதும் தேவைப்படும் இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கதக், லக்குந்தி பாரம்பரிய பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கோட்டே வீரபத்ரேஸ்வரர் கோவில் வளாகத்தில், அகழ்வாராய்ச்சி பணிகளை முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார்.திறந்தவெளி அருங்காட்சியம் ஒன்றை துவங்கி வைத்தார். சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மேல்சபை ஆளுங்கட்சி கொறடா சலீம் அகமது மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.முதல்வர் அளித்த பேட்டி:ஹொய்சாளர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள் ஆகியோர் மாநிலத்தில் பல வரலாற்று சுவடுகளையும், தடயங்களையும் விட்டு சென்று உள்ளனர். அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட, தற்போது மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.இதன் மூலம், அவர்களின் நிர்வாகத் திறமை, மகிமை ஆகியவற்றை அடையாளம் காண முடியும். மாநிலம் முழுதும் தேவைப்படும் இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கும்.கடந்த 2017 - 18ல், வரலாற்று சிறப்புமிக்க லக்குந்தியை மேம்படுத்துவதற்காக ஹெச்.கே.பாட்டீல், ஒரு ஆணையத்தை உருவாக்கினார். இதன் மூலம் அகழ்வாராய்ச்சிகள் துவங்கப்பட்டன.லக்குந்தியில் துவங்கப்பட்ட அருங்காட்சியத்திற்கு தேவையான நிதி வழங்கப்படும். அகழ்வாராய்ச்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும்.கடந்த காலங்களில் மன்னர்கள் கடவுள்களாக இருந்தனர். தற்போது மக்களே கடவுள். எனவே, அவர்களுக்கு சேவை செய்து வருகிறோம். 1991 லோக்சபா தேர்தலில், கொப்பால் தொகுதியில் போட்டியிட்டேன்.அப்போது, லக்குந்தி, கொப்பால் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் ராஜிவ் இறந்தார். இதனால், நான் 10,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை