உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் சித்தராமையா இன்று டில்லி பயணம்

முதல்வர் சித்தராமையா இன்று டில்லி பயணம்

பெங்களூரு : முதல்வர் சித்தராமையாவும், சில அமைச்சர்களும் இன்று டில்லி செல்கின்றனர். ஜனாதிபதியை சந்தித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, வேண்டுகோள் விடுப்பர் என, தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக அரசு தம்மிடம் அனுப்பி வைத்த சில மசோதாக்களை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், கையெழுத்திடாமல் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வைக்கு அனுப்பியுள்ளார்.இந்நிலையில் முதல்வர், சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள், இன்று மாலை டில்லி செல்கின்றனர். இரண்டு நாட்கள் அவர்கள் அங்கேயே இருப்பர். ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, ஐந்து மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படி வேண்டுகோள் விடுப்பர்.அதன்பின் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பத்ரா மேலணை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு, நிதி உதவி வழங்கும்படி வலியுறுத்துவர். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும், நேரம் கேட்டுள்ளனர். நேரம் ஒதுக்கி கொடுத்தால் அவரை சந்தித்து, கர்நாடகா சம்பந்தப்பட்ட திட்டங்கள், நிதியுதவி என, பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவர்.அனுமதி கிடைத்தால், காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். மேல் சபை உறுப்பினர்கள் நியமனம், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் உட்பட சில முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை