உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / யூரியா பற்றாக்குறை முதல்வர் சித்தராமையா கடிதம்

யூரியா பற்றாக்குறை முதல்வர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு: கர்நாடகாவில் யூரியா உரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநிலத்துக்கு தர வேண்டிய யூரியா உரத்தை, உடனடியாக அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசுக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, மத்திய உரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு, முதல்வர் எழுதிய கடிதம்: கர்நாடகாவுக்கு 11.17 லட்சம் டன் யூரியா உரம் வழங்க வேண்டும். இதில் 5.16 லட்சம் டன் மட்டுமே வந்துள்ளது. மேலும் 6.80 லட்சம் டன் யூரியா உரம் வர வேண்டும். சில உர நிறுவனங்கள், பற்றாக்குறையை காரணம் காண்பித்து உரம் வழங்கவில்லை. கடந்த ஆண்டை விட, இம்முறை மழை அதிகரித்துள்ளது. காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆற்றில் இருந்து, விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகளும் பயிரிடும் பணியை துவக்கி உள்ளனர். விவசாயிகளின் நலனை கருதி, உடனடியாக உரம் அனுப்ப வேண்டும். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். உரம் பற்றாக்குறை உள்ளதால், விவசாயிகள் கலக்கத் தில் உள்ளனர். இம்முறை பயிரிடும் பரப்பளவும் அதிகரித்துள்ளது. உரம் வந்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ