உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அலமாட்டி அணைக்கு செப்., 6ல் முதல்வர் சமர்ப்பண பூஜை

அலமாட்டி அணைக்கு செப்., 6ல் முதல்வர் சமர்ப்பண பூஜை

விஜயபுரா: முழு கொள்ளளவை அலமாட்டி அணை பெரும்பாலும் எட்டிவிட்டது. இம்மாதம் 6ம் தேதி, இந்த அணைக்கு முதல்வர் சித்தராமையா, சமர்ப்பண பூஜை செய்யவுள்ளார். ஆகஸ்ட் மாதம், மஹாராஷ்டிராவில் பரவலாக தொடர் மழை பெய்ததால், அம்மாநிலத்தின் அணைகளில் இருந்து, பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கிருஷ்ணா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. விஜயபுராவின் அலமாட்டி அணைக்கும் பெருமளவில் தண்ணீர் பாய்ந்து வந்தது. அணையின் முழு கொள்ளளவு, 519.6 மீட்டர், 129.72 டி.எம்.சி., ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 5௬ ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 5௨ ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பொதுவாக ஆகஸ்ட் இறுதியிலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ சமர்ப்பண பூஜை செய்யப்படும். அதன்படி இம்மாதம் 6ம் தேதி, அலமாட்டி அணைக்கு முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ