உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுவனை கொன்ற சிறார்கள் கைது

சிறுவனை கொன்ற சிறார்கள் கைது

பெங்களூரு: சிறுவன் கொலை வழக்கில் இரு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 5ம் தேதி, 13 வயது சிறுவன் அராபத் விபூதிபுரா ஏரி அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த எச்.ஏ.எல்.ஏ., போலீசார், இரு சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு மாதத்துக்கு முன், அராபத், அவரது சகோதரர், குற்றம்சாட்டப்பட்டவர் இடையே சிறிய தகராறு ஏற்பட்டது. அந்த பகையை மனதில் வைத்திருந்த சிறுவன், கடந்த 4ம் தேதி மாலை, விபூதிபுரா ஏரி அருகில் அராபத் இருப்பதை பார்த்த இரு சிறுவர்கள், அவரை தாக்கி கீழே தள்ளினர். பின், அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை