உள்ளூர் செய்திகள்

சினி கடலை

நாயகனாக அறிமுகம்இயக்குநர் ரவீந்திர நாத், மாட்னெஸ் என்ற படத்தில், நடிகர் சிவாங்கை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து, இயக்குநர் கூறுகையில், ''சிவாங்குக்கு திரையுலகம் புதிதல்ல. ஆனால் நாயகனாக நடிப்பது, இதுவே முதன் முறை. என் இயக்கத்தில் 2017ல் திரைக்கு வந்த புஷ்பக விமானா திரைப்படத்தில், இவர் வில்லனாக நடித்திருந்தார்.அதன்பின், மான்சூன் என்ற படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது அவருக்கு என் படத்தில், நாயகனாக வாய்ப்பளித்துள்ளேன். நாயகியாக ரவீக்ஷா நடித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவக்குவோம்,'' என்றார்.பேய் ஆராய்ச்சிநடிகை சுதாராணி சின்னத்திரை, வெள்ளித்திரை, ரியாலிட்டி ஷோ, வெப் சிரீஸ் என, பிசியாக உள்ளார். இதற்கிடையே, கோஸ்ட் என்ற திகில் குறும்படத்தை தயாரித்து, நடித்துள்ளார். கதை குறித்து அவரிடம் கேட்டபோது, “இதில் நான் ரிப்போர்ட்டராக நடிக்கிறேன். ஒரு வீட்டில் பேய் உள்ளதாக கேள்விப்பட்டு, அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய செல்வேன். நான் சிறுமியாக இருந்தபோது, குறும்படத்தில் நடித்துள்ளேன்.''நிஜ வாழ்க்கையில் எனக்கு பேய் பற்றிய நம்பிக்கை இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை படத்தில் காட்டியுள்ளோம். ஏற்கனவே சில காட்சிகள் படமாக்கினோம். ஒரு பழைய வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது,” என்றார்.சிகரெட் வில்லன்அபய் ஹரி நாயகனாக அறிமுகமாகும், ஸ்மோக்கர் சிவா படப்பிடிப்பை, சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரேம், 'கிளாப்' அடித்து துவக்கி வைத்தார். கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'நாயகன் சிவா செயின் ஸ்மோக்கர். இவரது வாழ்க்கையில் ஒரு சிகரெட் எப்படி விளையாடியது, எத்தனை பிரச்னைகளில் சிக்க வைத்தது என்பதை, படத்தில் காட்டியுள்ளோம்.'படத்தில் சிகரெட், வில்லன் கதாபாத்திரத்துக்கு சமமாக காட்டப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சோனு சூட் மற்றும் ரவிசங்கரிடம் பேசி வருகிறோம். பெங்களூரு, மங்களூரு உட்பட சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.மறுபடியும் ரிலீஸ்அனுாப் பண்டாரி, ரங்கி தரங்கா திரைப்படம் மூலம், இயக்குநராக அறிமுகம் ஆனவர். முதல் படமே சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. 2015ல் ஜூலை 3ம் தேதி, இப்படம் திரைக்கு வந்திருந்தது. தற்போது இதை 'ரீ ரிலீஸ்' செய்ய, இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.இதுகுறித்து, இயக்குநர் கூறுகையில், “ரங்கி தரங்கா மாறுபட்ட கதை கொண்டது. இது திரைக்கு வந்து 10 ஆண்டுகளாகின்றன. வரும் ஜூலை 3ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய தயாராகிறோம். மக்களின் ஆதரவு கிடைக்கும் என, நம்புகிறோம். விருப்பம் உள்ளவர்கள் படத்தை பார்க்கட்டும். படத்துக்கு நானே இசை அமைத்திருந்தேன். நிரூப் பன்டாரி, ராதிகா சேத்தன், சாய்குமார் உட்பட, பலர் நடித்திருந்தனர்,” என்றார்.மாறுபட்ட கதைதிரையுலகில் நுழைந்த குறுகிய காலத்தில், வெற்றிப்பட நாயகியாக வலம் வந்தவர் நடிகை பிருந்தா ஆச்சார்யா. இரண்டு ஆண்டுகளாக நடிக்கவில்லை. இப்போது, எக்ஸ் அண்ட் ஒய் என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, அவரிடம் கேட்ட போது, “தற்போது இரண்டு படங்களுக்கு, கால்ஷீட் கொடுத்துள்ளேன். இரண்டு படங்களும் மாறுபட்ட கதை கொண்டதாகும். என் நடிப்பில் 'எக்ஸ் அண்ட் ஒய்' திரைக்கு வந்துள்ளது,” என்றார்.வனப்பகுதியில் மாயம்கன்னடம், துளு திரையுலகில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, அனுபவம் உள்ள ரக்ஷித் குமார், இப்போதே முதன் முறையாக கன்னடத்தில், ஜங்கல் மங்கல் என்ற படத்தை இயக்குகிறார்.கதை பற்றி அவர் கூறுகையில், “படத்தில் யஷ் ஷெட்டி, ஹர்ஷிதா ராமசந்திரா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். நாயகனும், நாயகியும் வனப்பகுதிக்கு சென்று, காணாமல் போகின்றனர். அவர்களை கிராமத்தினர் தேடி கண்டுபிடிப்பதே, கதையின் சாராம்சமாகும். பெருப்பகுதி படப்பிடிப்பு, வனப்பகுதியில் படமாக்கப்பட்டது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை