உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத்துடன் முதல்வர் சித்தராமையா திடீர் சந்திப்பு

காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத்துடன் முதல்வர் சித்தராமையா திடீர் சந்திப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் மேல்சபை எம்.எல்.சி., ஹரிபிரசாத் வீட்டிற்கு முதல்வர் சித்தராமையா நேற்று திடீரென சென்றது, ஆர்வத்தை துாண்டி உள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைத்த போது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஹரிபிரசாத் நினைத்திருந்தார். ஆனால் கிடைக்கவில்லை.இதனால், கோபம் அடைந்த ஹரிபிரசாத், முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து பேசி வந்தார். இதை, துணை முதல்வர் சிவகுமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். இப்போது சிவகுமாரை, ஹரிபிரசாத் ஆதரித்து வருகிறார்.பெங்களூரில் காங்கிரஸ் நடத்திய 'ஜெய் ஹிந்த்' நிகழ்ச்சிக்கு வந்த கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜோவாலா, வேணுகோபால் ஆகியோர் ஹரிபிரசாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.இந்நிலையில், நேற்று காலை ஹரிபிரசாத் வீட்டுக்கு, முதல்வர் சித்தராமையா சென்றார். அவருடன் அமைச்சர் ஜமீர் அகமது கான், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமதுவும் இருந்தனர். இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர்.பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:காலை உணவுக்கு வரும்படி ஹரிபிரசாத் என்னை அழைத்திருந்தார். அதனால் வந்தேன். நாங்கள் இருவரும், மங்களூரு விவகாரம் குறித்து பொதுவாக விவாதித்தோம்.தட்சிண கன்னடாவில் நிலவும் பதற்றத்தை போக்க, ஹிந்து - முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவது குறித்து விவாதித்தோம். அவரை அங்கு சென்று, நிலைமையை கவனித்து கொள்ளும்படி கூறி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஹரிபிரசாத் கூறுகையில், ''அரசியல் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. மங்களூரு சம்பவம் பற்றி மட்டுமே விவாதித்தோம். அமைச்சரவையில் பதவி, சபாநாயகர் பதவி என எதுவும் விவாதிக்கவில்லை,'' என்றார்.முதல்வரின் திடீர் வருகைக்கு பின், பல உள்நேக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி மேலிடத்தில் அதிக செல்வாக்கு உள்ள நபர்களில் ஹரிபிரசாத்தும் ஒருவர்.அமைச்சரவை சீரமைப்புக்கான கோரிக்கைகள் ஏற்கனவே உள்ளன. அமைச்சர் பதவி மீது ஹரிபிரசாத்துக்கு விருப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.30_DMR_0002காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத்தை, அவரது இல்லத்தில் முதல்வர் சித்தராமையா சந்தித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி