உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாகிஸ்தானியர் எண்ணிக்கை தெரியாது சொல்கிறார் முதல்வர் சித்தராமையா

பாகிஸ்தானியர் எண்ணிக்கை தெரியாது சொல்கிறார் முதல்வர் சித்தராமையா

மைசூரு : மைசூரில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:காஷ்மீரில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணியர் வருகை தரும் இடங்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தாலும், 26 பேரின் உயிர் திரும்பி வருமா?பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது. காங்கிரஸ், போரை ஆதரிக்காது. காஷ்மீரில் அமைதியை உறுதி செய்ய, மத்திய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. அதை வீட பீஹார் சட்டசபை தேர்தலை முக்கியம் என நினைத்து செயல்படுகிறார்.மாநிலத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்புவதற்கு, மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும். மாநிலத்தில் எத்தனை பாகிஸ்தானியர் இருப்பர் என்பது எனக்கு தெரியாது. ஆனால், பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.சாம்ராஜ் நகருக்கு பல முறை சென்று வந்துள்ளேன். அங்கு சென்றால் பதவி பறிபோகும் என்ற முட்டாள் தனம் மறைந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.மூக்கை நுழைக்க வேண்டாம்!பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள சித்தராமையாவுக்கு எந்த சூழலில் என்ன சொல்வது என்பது சிறிதளவு கூட தெரியாது. பஹல்காம் தாக்குதல் குறித்து முதல்வரின் ஆலோசனை தேவையில்லை. ஆலோசனை கூறுவதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். எந்த நேரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ராணுவம் முடிவு செய்யும்.அசோக், பா.ஜ.,எதிர்க்கட்சித் தலைவர்சட்டசபை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை