உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமான விபத்தில் இறந்த துணை பைலட் கிளைவ் குந்தரின் பூர்வீகம் மங்களூரு

விமான விபத்தில் இறந்த துணை பைலட் கிளைவ் குந்தரின் பூர்வீகம் மங்களூரு

பெங்களூரு: ஆமதாபாத் விமான விபத்தில் இறந்த, துணை பைலட் கிளைவ் குந்தரின் பூர்வீகம், மங்களூரு என்று தெரிய வந்துள்ளது.குஜராத் ஆமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நேர்ந்த விமான விபத்தில், துணை பைலட் கிளைவ் குந்தர், 33, என்பவரும் உயிரிழந்தார்.இவர் மும்பையின் குர்லாவில் வசித்தவர். 2012ல் இருந்து துணை விமானியாக பணியாற்றும் இவர் 1,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர்.தற்போது மும்பையில் வசித்தாலும், கிளைவ் குந்தரின் பூர்வீகம், கர்நாடகாவின் மங்களூரு என்று தெரிய வந்துள்ளது. கிளைவ் குந்தர் தந்தை கிளிபர்ட் குந்தர் மங்களூரை சேர்ந்தவர்.இவரும் விமான பைலட் தான். தாய் ரேகா ஏர் இந்தியாவில் 33 ஆண்டுகள் விமான பணிப்பெண்ணாக வேலை செய்தவர்.சிறுவயதில் இருந்து விமானி ஆக வேண்டும் என்ற ஆசை, கிளைவ் குந்தருக்கு இருந்துள்ளது. மும்பையில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்த பின், அமெரிக்காவின் புளோரிடா சென்று விமானி பயிற்சி பெற்றார்.பயிற்சிக்கு பின், ஒரு விமான நிறுவனத்தில் வணிக விமானியாகவும் பணியாற்றினார். 2017 முதல் ஏர் இந்தியாவில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.இதுபோல விபத்தில் பலியானவர்களில் ஆமதாபாத்தை சேர்ந்த சேர்ந்த ஹர்பிரீத் கவுர், 28, என்பவரும் ஒருவர். பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரபி ஹோரா, லண்டனில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு வரும் 19ம் தேதி பிறந்த நாள். கணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, ஆசையுடன் லண்டன் புறப்பட்ட ஹர்பிரீத் கவுர், இப்போது இல்லை என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ