ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற கமிஷனர் உத்தரவு
பெங்களூரு: ''சட்டவிரோத கட்டடங்கள், வரைபட விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு மாநகராட்சி மஹாதேவபுரா மண்டலத்தின், நல்லுார ஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ஒயிட் பீல்டு பிரதான சாலை வரையிலான சாலைகளை, மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ், நேற்று மதியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.நல்லுாரஹள்ளி காலனியில் சில கட்டடங்கள், வரைபட விதிமுறைகளை மீறி கட்டியிருப்பது தெரிந்தது. இந்த கட்டடங்களை அகற்றும்படி அதிகாரிகளுக்கு, தலைமை கமிஷனர் உத்தரவிட்டார்.டார்ட்ஒர்த் என்கிளேவ் சாலை அருகில், சாக்கடை உடைப்பெடுத்து சாலையில் கழிவு நீர் ஓடுவதை கண்டு, அதிருப்தி அடைந்தார். உடனடியாக சரி செய்யும்படி அறிவுறுத்தினார்.'நல்லுாரஹள்ளி பிரதான சாலை ஓரங்களில், வாகனங்கள் நிறுத்தப்பட்டதை கண்டு, அதை அகற்ற வேண்டும். மழை நீர்க்கால்வாய்க்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். நடை பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேடும். சட்டவிரோதமான ஒ.எப்.சி., கேபிள்களை அகற்ற வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள சாக்கடைகளில் அடைப்புகளை அகற்றி, நீர் தடையின்றி செல்ல வழி செய்யுங்கள்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.