உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெளிமாநில பஸ்களிடம் லஞ்சம் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மீது புகார்

வெளிமாநில பஸ்களிடம் லஞ்சம் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மீது புகார்

பெங்களூரு: வெளிமாநில சொகுசு பஸ்களை குறிவைத்து அத்திபள்ளி ஆர்.டி.ஓ., அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பெங்களூரு வழியாக வரும் பிற மாநில சொகுசு பஸ்களிடம் அத்திபள்ளி ஆர்.டி.ஓ., அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக, போக்குவரத்து கமிஷனர் செல்வமணியிடம் பெங்களூரை சேர்ந்த வக்கீல் நடராஜ் ஷர்மா நேற்று புகார் அளித்தார். இதையடுத்து, அவர் அளித்த பேட்டி: பெங்களூருக்குள் நுழையும் வெளிமாநிலங்களை சேர்ந்த சொகுசு பஸ்களை குறிவை த்து, அத்திபள்ளி ஆர்.டி.ஓ., அதிகாரிகள் லஞ்சம் வசூலிக்கின்றனர். உதாரணமாக ஒரு பஸ்சுக்கு மாதம் 30,000 ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. லஞ்சம் வசூலிப்பதற்காகவே பிரத்யேக, ‘வாட்ஸாப்’ குழு இயங்குகிறது. இது குறித்து, போக்குவரத்து துறை விசாரிக்க வேண்டும். அத்திபள்ளி ஆர்.டி.ஓ., அதிகா ரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். இவ்விஷயத்தில் லோக் ஆயுக்தா போலீசாரின் நடவ டிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !