உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு நிலம் அபகரிப்பு காங்., - எம்.எல்.ஏ., புகார்

 அரசு நிலம் அபகரிப்பு காங்., - எம்.எல்.ஏ., புகார்

மாண்டியா: ஸ்ரீரங்கப்பட்டணாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக காங்., - எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தேகவுடா குற்றஞ்சாட்டினார். இது குறித்து, மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தேகவுடா கூறியதாவது: ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கசாபா, பெலகோலா நகராட்சிகளில் உள்ள அரசு நிலங்கள் சட்ட விரோதமாக தனியாருக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அதிகாரிகள் குறிப்பிட்ட நபர்களுக்கு ஒதுக்கி உள்ளனர். என் தொகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து சட்டசபையில் பேசுவேன். ஆனால், சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மூன்று ஏக்கர் பரப்புள்ள ஏரி மூடப்பட்டு உள்ளது. இதில், வட்டாட்சியருக்கும் தொடர்பு உண்டு. அவர் அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தில் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி