உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குமாரசாமியுடன் காங்., – எம்.எல்.சி., சந்திப்பு

குமாரசாமியுடன் காங்., – எம்.எல்.சி., சந்திப்பு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் ராஜண்ணா. இவரது மகன் ராஜேந்திரா. காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியை திடீரென சந்தித்து பேசினார். முதல்வர் சிவகுமாருக்கும், ராஜண்ணாவுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், சிவகுமாரை விமர்சிக்கும் குமாரசாமியை, ராஜேந்திரா சந்தித்து இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ