அரசியலமைப்பு தினம் மைசூரில் இன்று ஏற்பாடு
மைசூரு: ‘‘இன்று நடக்கும் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர்,’’ என, அமைச்சர் முனியப்பா தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மைசூரு மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் இன்று நடக்கும் அரசியலமைப்பு தினத்தை, முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார். மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். அத்துடன், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின், 224 சட்டசபை தொகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே, இந்திய அரசியலமைப்பு, ஜனநாயகத்தின் வரலாறு, விருப்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, இளைஞர் பார்லிமென்ட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு கண்காட்சி உட்பட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கடந்த காலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை அனைத்து அமைச்சர்களும், தலைவர்களும் மைசூரில் கைகோர்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.