உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அஞ்சலி கொலையில் குற்றவாளிக்கு நவ., 25ல் தண்டனை விபரம் அறிவிப்பு

அஞ்சலி கொலையில் குற்றவாளிக்கு நவ., 25ல் தண்டனை விபரம் அறிவிப்பு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியின் வீராபுராவில் தன் பாட்டி மற்றும் சகோதரிகளுடன் வசித்தவர் அஞ்சலி அம்பிகேரா, 20. இதே பகுதியில் வசிக்கும் கிரிஷ் என்ற விஸ்வநாத் சாவந்த், 28, அஞ்சலியை ஒருதலையாக காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கடந்த 2024ன் மே 15ம் தேதியன்று, அதிகாலை 5:10 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்த கிரிஷ், திருமணத்துக்கு வற்புறுத்தினார். அப்போதும் அஞ்சலி மறுத்ததால், அவரை கத்தியால் பல முறை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். சம்பவம் நடந்த மறுநாள் கிரீஷ், ஹூப்பள்ளி – தார்வாட் போலீசாரிடம், சிக்கினார். அஞ்சலி கொலை வழக்கை, மாநில அரசு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தது. விசாரணை நடத்திய அதிகாரிகள், ஹூப்பள்ளியின் முதலாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் கிரீஷின் குற்றம் உறுதியானதால், அவரை குற்றவாளி என, நீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. நவம்பர் 25 அன்று தண்டனை விபரம் அறிவிப்பதாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை