உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொரோனா முறைகேடு வழக்கு 2வது இடைக்கால அறிக்கை

கொரோனா முறைகேடு வழக்கு 2வது இடைக்கால அறிக்கை

பெங்களூரு,: கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் 2,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கொரோனா மருத்துவ உபகரண முறைகேடு பற்றி விசாரிக்க ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, முதல் இடைக்கால அறிக்கையை, சித்தராமையாவிடம் ஜான் மைக்கேல் குன்ஹா தாக்கல் செய்தார்.அதில், சீன நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. டெண்டர்களுக்கு அழைப்பு விடுக்காமல் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது என்பது உட்பட, பல விஷயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், இரண்டாவது இடைக்கால அறிக்கையை, சித்தராமையாவிடம், ஜான் மைக்கேல் குன்ஹா நேற்று இரவு தாக்கல் செய்தார். இது, எத்தனை பக்க அறிக்கை என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.கொரோனா முறைகேடு தொடர்பான முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ