இருமல் சிரப் பயன்பாடு வழிகாட்டு நெறிமுறைகள்
பெங்களூரு: குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. வட மாநிலங்களில், 'கோல்ட்ரிப் சிரப்' எனும் இருமல் மருந்தை குடித்த சில குழந்தைகள் உயிரிழந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோல்ட்ரிப் சிரப்களின் விற்பனைக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இருமல் சிரப்புகளை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்குவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், சிரப் கொடுக்க கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு பின் வழங்க வேண்டும். குறைந்த அளவு மருந்தையே, குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். ஏற்கனவே, பயன்படுத்திய மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பலவகை மருந்துகளை உள்ளடக்கிய இருமல் மருந்துகளை பரிந்துரை செய்யக்கூடாது. மருத்துவமனைகள் அங்கீகரிப்பட்ட மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.