உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்டடத்தில் தம்பதி சாவு குடும்ப பிரச்னையே காரணம்

கட்டடத்தில் தம்பதி சாவு குடும்ப பிரச்னையே காரணம்

சஞ்சய் நகர்: கட்டுமான கட்டடத்தில் இறந்து கிடந்த தம்பதி, குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.யாத்கிரியை சேர்ந்தவர் மெஹபூப், 45. இவரது மனைவி பர்வீன், 35. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தம்பதி பிழைப்பு தேடி ஓராண்டுக்கு முன்பு, பெங்களூருக்கு வந்தனர்.சஞ்சய் நகரின், டாலர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வேலை செய்து வந்தனர். அங்கேயே தங்கியிருந்தனர். இவர்களின் பிள்ளைகள் ஊரிலேயே படிக்கின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த கட்டடத்தில் தம்பதி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த சஞ்சய் நகர் போலீசார், உடல்களை மீட்டு விசாரணையில் இறங்கினர். தம்பதி இறப்புக்கு குடும்ப பிரச்னையே காரணம் என, தெரிய வந்தது.சம்பவம் நடப்பதற்கு, மூன்று நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் அடித்துக் கொண்டனர். இதில் மனம் நொந்த மெஹபூப், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்ததை பார்த்து பர்வீன், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ