உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் கைதிகளான ஹரிஷ், குமாரசாமி, சுபாஷ் ஆகியோர், மற்றொரு கைதி சங்கர் என்பவரை சரமாரியாக தாக்கினர். இதில் சங்கரின் கை முறிந்தது. சிறையில் சங்கருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஹரிஷ் படுத்து இருந்ததால் ஏற்பட்ட தகராறில், தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்து உள்ளது.பெங்களூரு பொம்மனஹள்ளி விஸ்வபிரியா நகரின் ஸ்ரேயாஷ், 19. இவர் நேற்று காலை தனது நண்பர் சேத்தனுடன், பைக்கில் சாந்திநகர் ரெசிடென்சி சாலையில் சென்றார். ரிச்மென்ட் சதுக்கத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. ஸ்ரேயாஷ் உயிரிழந்தார். சேத்தன் படுகாயம் அடைந்தார்.சாம்ராஜ்நகரின் ஹனுார் செங்கடி கிராமத்தை சேர்ந்தவர் அனுபமா, 21. ராய்ச்சூரின் சிந்தனுாரின் நாகராஜ், 22, என்பவரை, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 11 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் கணவர் வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அனுபமாவை துன்புறுத்தி, நாகராஜும், அவரது குடும்பத்தினரும் கொலை செய்து உடலை துாக்கில் தொங்கவிட்டதாக, சிந்தனுார் போலீசில் அனுபமா தந்தை பசவராஜ் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.ஹாசன் அரகலகூடு ஜன்னாபுராவை சேர்ந்தவர் அபிதா பானு. இவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சி, ஷிவமொக்கா பத்ராவதி கோண்டி கிராமத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் வேனில் ஊருக்கு சென்றனர். கோண்டி கிராமத்தில் உள்ள கால்வாய் அருகே வேனை நிறுத்திவிட்டு அபிதா பானுவும், அவரது குடும்பத்தினரும் குளிக்க சென்றனர். நகை, பணத்தை ஒரு பையில் போட்டு, வேனில் வைத்துவிட்டு அபிதா பானு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது நகை, பணம் இருந்த பையை காணவில்லை. நகையின் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என்று, போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ரூ.6 லட்சம் நகை திருட்டு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி