உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

80 ஆடுகள் உயிரிழப்பு

கதக், ஷிரஹட்டியின், ஹொளே இடகி கிராமத்தின், வனப்பகுதி அருகில் நேற்று மாலை, ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இங்கு விளைந்திருந்த விஷத்தன்மை கொண்ட இலைகளை தின்றதால், 80க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.

குளத்தில் விழுந்து 2 சிறுவர் பலி

ஹாசன், சக்லேஷ்புராவின், ஹோசூர் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணாவின் மகன் பிரணம், 7, பிரசாந்தின் மகன் நிஷாந்த், 4. இவர்கள் நேற்று காலை பெற்றோருடன் காபி தோட்டத்துக்கு சென்றனர். பொம்மை ரயிலை கொண்டு இருவரும் விளையாடினர். அப்போது பொம்மை ரயில், அங்கிருந்த விவசாய குளத்தில் விழுந்தது. அதை எடுக்க இரண்டு சிறுவர்களும் முயற்சித்தபோது, நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்தனர்.

கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கோலார், தங்கவயலின், கிருஷ்ணா வரம் அருகில் உள்ள பாலம் மீது, நேற்று மதியம் கார் ஒன்று அதிவேகமாக வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டி, பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. காரில் இருந்த கர்ணா, 48, உயிரிழந்தார். நால்வர் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.

சாலை விபத்தில் 2 பேர் பலி

விஜயநகரா, கூட்லகியின், பனவிகல்லு அருகில், தேசிய நெடுஞ்சாலை - 50ல், நேற்று முன் தினம் மாலை வேகமாக சென்ற காரொன்று, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் ப்ரீத்தி, 35, இவரது ஒன்றரை வயது மகன் யஷ்வித் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இவரது கணவர் மோகன்குமார் உட்பட, ஏழு பேர் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !