மேலும் செய்திகள்
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
02-Oct-2025
இது தொடர்பாக, என்.சி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 2023ல் பதிவான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2023ம் ஆண்டு 1,436 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து, 1,322 வழக்குகள் பதிவாகின. இதே ஆண்டு 3,015 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட, மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களும், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. 2022ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2023ல் கர்நாடகாவில், 35 சதவீதம், பெங்களூரில் 41.7 சதவீதம் வழக்குகள் அதிகரித்துள்ளன. 2023ம் ஆண்டு, மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி, 1,840 வழக்குகள் பதிவாகின. அதே போன்று பெங்களூரில் 459 வழக்குகள் பதிவாகின. மூத்த குடிமக்களை போலி ஆவணங்களை உருவாக்கி ஏமாற்றுவது, 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்வது போன்ற குற்றங்கள் நடந்துள்ளன. 64 சதவீதம் வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரின் பல்வேறு நீதிமன்றங்களில், வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன. பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 2023ல், 4,360 வழக்குகள் பதிவாகின. கடந்த 2023ம் ஆண்டு, சாலை விபத்துகளும் அதிகமாக இருந்தன. 12,322 பேர் உயிரிழந்துள்ளனர். ஆசிட் வீச்சு தொடர்பாக, நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 13,000க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளன. மாநிலத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ், 2023ல் 1.48 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே சட்டத்தின் கீழ், 2021ல் 1.15 லட்சம் வழக்குகளும், 2022ல் 1.29 லட்சம் வழக்குகளும் பதிவாகின. நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டால், பெங்களூரில் 2023ல் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவாகி உள்ளன. மொத்தம், 17,631 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், மும்பை மற்றும் லக்னோ நகரங்களை, பெங்களூரு பின்னுக்கு தள்ளியுள்ளது. 2022ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2023ல் பெங்களூரு நகரில் சைபர் மோசடி வழக்குகள் எண்ணிக்கை, 77.37 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகமான குற்றங்கள் நடக்கும் இந்திய நகரங்களின் பட்டியலில், பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், பெங்களூரில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொள்ளை, தீ வைப்பது போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. நகர் அதிவேகமாக வளர்ச்சி அடைவது, இதனால் ஏற்படும் நெருக்கடியே குற்றங்களுக்கு காரணமாகின்றன. மும்பை, டில்லியில் குற்றங்கள் ஓரளவு குறைந்துள்ளன. ஆனால், பெங்களூரில் 47 சதவீதம் அதிகரித்துள்ளன. 2023ல் நகரில் 3,528 வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆட் கடத்தல் குற்றங்களும், பெங்களூரில் அதிகரிக்கின்றன. 2023ல் இது குறித்து, 1,089 வழக்குகள் பதிவாகின. கொள்ளை வழக்குகளும், நகரில் ஏறுமுகமாக உள்ளது. ஹைதராபாதில் ஓரளவு அதிகரிக்கிறது என்றாலும், பெங்களூரு அளவுக்கு இல்லை. வரதட்சணை கொடுமை வழக்கிலும் கூட, இந்த நகர் முன்னணியில் உள்ளது. என்.சி.ஆர்.பி., ஆய்வறிக்கையின்படி, 2023ல் கர்நாடகாவின் மொத்த சூழ்நிலையை கவனித்தால், பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது தெரிகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவு, 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
02-Oct-2025