உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாதுகாப்பு வேலி தாண்டிய முதலை

பாதுகாப்பு வேலி தாண்டிய முதலை

உத்தரகன்னடா: கார்வாரின் காளி ஆற்றில், தடுப்பை மீறிய முதலை ஓய்வுக்கு பின், மீண்டும் ஆற்றில் செல்லும் வீடியோவால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் தண்டேலியின் காளி ஆற்றில், முதலைகளை பார்க்கலாம். பொது மக்கள் பாதுகாப்புக்காக, கரை ஓரங்களில் உள்ள படிக்கட்டுகளில், ஆங்காங்கே வனத்துறையினர் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். ஆனால், நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பரவியது. அதில், காளி ஆற்றில் மக்கள் பயன்படுத்தும் பகுதியில் இரும்பு வேலியின் உள்ளே உழைந்த 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று, கரையில் படுத்திருந்தது. 10 நிமிடங்கள் படுத்திருந்த முதலை, மீண்டும் வந்த வழியே இரும்பு வேலிகளுக்கு இடையே புகுந்து ஆற்றில் சென்றது. இதை ஆற்றங்கரையில் துணி துவைத்து கொண்டிருந்த ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளார். மக்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட வேலியை தாண்டி முதலை வருகிறது என்றால், இந்த வேலி பாதுகாப்பானதா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது. எதிர்காலத்தில் பொது இடங்களில் முதலைகள் நுழைந்தால் என்னாவது என்று உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ