உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓடை கரையில் முதலை: மக்கள் அச்சம்

ஓடை கரையில் முதலை: மக்கள் அச்சம்

தட்சிண கன்னடா: புத்துார் - சாவனுார் - சுப்ரமண்யா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஓடும் கவுரி ஓடை அருகில் முதலை ஓய்வு எடுக்கும் வீடியோ பரவியதால் பரபரப்பாகி உள்ளது. மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பியதால், நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் நுழைந்துள்ளன. இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம், கடபாவின் புத்துார் - சாவனுார் - சுப்ரமண்யா மாநில நெடுஞ்சாலை அருகில் ஓடும் கவுரி ஓடையின் கரையில், 5 அடி நீளத்தில் முதலை இருப்பதை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கேசவசந்திரா பார்த்தார். உடனடியாக அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால், ஓடையின் அருகில் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி, ஓடை அருகிலேயே நெடுஞ்சாலை இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் சாலைக்கு வரும் என அச்சம் அடைந்து உள்ளனர். 2024 டிசம்பருக்கு பின், தற்போது அதே பகுதியில் முதலை தென்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதியில் அவ்வப்போது யானைகள் வந்து அச்சுறுத்தி வருகின்றன. தற்போது முதலைகளும் வர துவங்கி உள்ளதால், அச்சத்தில் உள்ளனர். ஓடைகளில் உணவு கழிவுகளை கொட்டுவதால் அதனால் ஈர்க்கப்படும் முதலைகள் இங்கு வருவதாக, நம்புகின்றனர். முதலையை பிடித்து வேறு இடத்தில் விடும்படி, வனத்துறையினரிடம் கேட்டு கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை