உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரில் ஜெயிலர்-2 ரஜினியை பார்க்க கூட்டம்

மைசூரில் ஜெயிலர்-2 ரஜினியை பார்க்க கூட்டம்

மைசூரு: தமிழ் திரைப்பட ஷூட்டிங்கிற்காக, நடிகர் ரஜினி மைசூரு வந்துள்ளார்.மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், பிளிகெரே அருகில், கடந்த ஒரு வாரமாக, தமிழ் திரைப்படம் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்.குறிப்பாக ரஜினியை காண, ரசிகர்கள் முட்டி மோதுகின்றனர். காரில் படப்பிடிப்புக்குச் செல்லும்போதும், படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போதும், ரசிகர்கள், பொது மக்கள் சாலை ஓரங்களில் நின்று, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள போட்டி போடுகின்றனர்.'தலைவா' என, கோஷம் போடுகின்றனர். ரஜினியும் கைகூப்பி நன்றி கூறுகிறார். படப்பிடிப்பு நடப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது, போலீசாருக்கு பெரும்பாடாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !